கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
கடந்த சில மாதங்களாகவே தெலுங்கில் வெளியான படங்களை கவனித்து பார்த்தால், அது சின்ன படமோ, பெரிய படமோ, அவற்றின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து கலந்து கொண்டு படக்குழுவினரை உற்சாகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த சர்வானந்த் நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள 'ஸ்ரீகரம்' என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, 'சர்வானந்த் எனக்கு இன்னொரு ராம்சரண் போன்றவர்” என வாழ்த்தி பேசியுள்ளார்.
அந்த நிகழ்வில் சிரஞ்சீவி பேசும்போது, “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என கூறி ராம்சரண் என்னை கேட்டுக்கொண்டார். ராம்சரணும் சர்வானந்தும் சிறுவயது முதல் நண்பர்கள்.. சர்வானந்த் என் வீட்டில் வளர்ந்த பையன்.. அதனால் எனக்கு இன்னொரு ராம்சரண் போன்றவர். அவருக்கு நடிப்பில் விருப்பம் இருக்கிறதா என தெரியாமலேயே தான், என்னுடன் சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிக்க வைத்தேன்.. ஆனால் அதன்பின் நடந்ததெல்லாம் வேற லெவல். அவருக்குள் இருந்த நெருப்பு அவரை மிகப்பெரிய அளவிற்கு கொண்டுவந்து விட்டது. இந்தப்படத்தின் சில காட்சிகளை நான் பார்த்துவிட்டேன். அப்போதே இந்தப்படத்தின் வெற்றி உறுதி என தெரிந்துவிட்டது” என கூறி, சர்வானந்த் உள்ளிட்ட படக்குழுவினரை நெகிழ வைத்துவிட்டார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி தற்போது கம்மம் பகுதியில் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதால், அவருக்காகவே இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை, கம்மம் பகுதியிலேயே நடத்த சர்வானந்தும் ஸ்ரீகரம் படத்தின் தயாரிப்பாளரும் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.