ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவராக இருப்பவர் புகழ். அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனிலேயே பிரபலமடைந்தவர், தற்போது இரண்டாவது சீசனிலும் நிறைய ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது சொந்தமாக ஒரு புதிய காரை வாங்கியிருக்கிறார். தான் கார் வாங்கியது பற்றி ரசிகர்களுக்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையே யு டியுபில் பதிவிட்டுள்ளார்.
அதில், “என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது ரசிகர்கள்தான். எங்களது பரம்பரையிலேயே முதல் கார் வாங்கியது நான்தான். நான் கார் வாங்கியது குறித்து எனது அம்மாவுக்கு சொன்னேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு காலத்தில் காரைக் கழுவி, 10 ரூபாய் டிப்ஸ் வாங்கியவன் நான். இன்று நானே சொந்தமாக ஒரு காரை வாங்கி உள்ளேன். என்னுடைய ஆசை, எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும், அதைச் செய்வேன்,” எனக் கூறியுள்ளார்.
ரசிகர்கள் பலரும் கார் வாங்கிய புகழுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.