ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடமிருந்து ரூ. 70 லட்சத்தை நடிகர் ஆர்யா வாங்கியதாகவும், அதை திருப்பித்தர மறுப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், ஆர்யா மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரினை தமிழக உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் கோபால்ஜா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் ஆகியோருக்கு அந்த புகாரை அனுப்பியுள்ளார் விட்ஜா.
அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் தற்போது ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறேன். கொரோனா சமயத்தில் தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்ன நடிகர் ஆர்யா, என்னிடத்தில் ரூ.70 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கினார். அதோடு தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னவர், பின்னர் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து ஆர்யாவிடம் கேட்டபோது தன்னை தவறான வார்த்தைகளில் திட்டினார். நான் இந்த மோசடி குறித்து புகார் கொடுப்பேன் என்று சொன்னபோது, அப்படி செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஆர்யா நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரபரப்பு செய்திகள் வெளியானபோதும் இன்னமும் ஆர்யாதரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நடிகர் ஆர்யா 2019ஆம் ஆண்டில் தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த பாலிவுட் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.