ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சமுத்திரகனி நடிப்பில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். விஜய் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். இந்த தகவல் வெளிவந்ததும் அப்பா பதிவு செய்ய இருக்கும் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. எனது படத்தையோ பெயரையோ அவர் பயன்படுத்தக்கூடாது என்று விஜய் அறிவித்தார்.
மகனின் எதிர்ப்பை தொடர்ந்து கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாபஸ் பெற்றார். என்றாலும் மன்றத்தில் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களை விஜய் களையெடுத்தார். அப்பாவுக்கும், மகனுக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளார். இதற்கு செக்யூர் அவர் சிட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்.
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக நான் ஒரு முயற்சி எடுத்திருக்கிறேன். அந்த முயற்சியின் முதல்படி தான் இது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றிய விரிவான அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று தெரிகிறது.