கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசுகள் களம் இறங்குகிறார்கள். ஆனால், ஒரு சிலர் தான் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு வாரிசுகள் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சரியம் தான். நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி இருவரும் தான் அந்த வாரிசுகள்.
2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படம் வெளிவந்தது. முதல் படத்திலேயே கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார் கார்த்தி. ஆனால், அவருடைய இரண்டாவது படம் வெளிவர ஏறக்குறைய மூன்று வருடங்களாகிவிட்டது.
“ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி” என இதுவரையில் தான் நடித்த 19 தமிழ்படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான 14 வருடங்களில் 19 படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமானதுதான். அவர் நடித்து முடித்துள்ள 'சுல்தான்' படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.