துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாகுபலி, பாகுபலி-2 படங்களைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியாபட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து, மகேஷ்பாபு நடிக்கும் ஒரு மெகா படத்தை ராஜமவுலி இயக்கயிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படமும் ராஜமவுலியின் முந்தைய படங்களைப்போன்று ஐந்து மொழிகளில் உருவாகிறதாம். இதையடுத்து இப்படத்தில் நடிக்க, தெலுங்கு, தமிழ், ஹிந்தி சினிமாவில் உள்ள சில பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.