ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் அரசியல் பயணமாக சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வரப்போகிறார் என்றதுமே நேற்றே சோசியல் மீடியாவில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டாக்கை பலர் டிரெண்ட் செய்தனர். நடிகை ஓவியாவும் கோபேக் மோடி என டுவீட் செய்திருந்தார். இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.
இந்தநிலையில், பாஜகவைச் சேர்ந்தவரான நடிகை காயத்ரி ரகுராம், ஓவியாவின் அந்த பதிவுக்கு தனது டுவிட்டரில் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், வாயை மூடிட்டு போடி என்பது சரியாக இருக்கும். உன்னை அவமதிக்க எதுவுமில்லை. நான் உனக்கு எப்போதுமே எதிரானவள் தான். நான் சரியானதையே தேர்வு செய்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். மேலும் இது திமுக.,வின் திசை திருப்பும் வேலை. உதயநிதி, ஸ்டாலினை நான் கடுமையாக விமர்சித்து வருவதால் திமுக இதை செய்துள்ளது. மேலும் ஓவியாவை அவர்கள் விலைக்கு வாங்கி உள்ளனர் என குற்றம் சாட்டி உள்ளார்.
பிக்பாஸ் முதல் சீசனிலேயே ஓவியாவிற்கும், காயத்ரிக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.