இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த விதார்த், மைனா படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு முதல் இடம், மயிலு, ஜன்னல்ஓரம், வெண்மேகம், பட்டய கிளப்பணும் பாண்டியா, காடு, ஆள், குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, வண்டி, சித்திரம் பேசுதடி 2ம் பாகம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது என்றாவது ஒரு நாள், அன்பறிவ், ஆற்றல், அஞ்சாமை, ஆயிரம் பொற்காசுகள் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது விதார்த் தனது 25வது படத்திற்கு வந்துள்ளார். பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை சீனிவாசன் இயக்கி வருகிறார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அண்ணாதுரை படத்தை இயக்கியவர் . த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
விதார்த்துடன் தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ், பவுலின் ஜெசிகா, மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி, சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது: 6 பகல்கள் மற்றும் 7 இரவுகளில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்திப் பரபரப்பாக நகரும் ஹாலிவுட் பாணியிலான படம்.
படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதால் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு, டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. என்றார்.