காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
2014ல் வெளிவந்த 'பண்ணையாரும் பத்மினியும்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். கடந்த ஆறு ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் வெளிவந்த படங்களில் சில பாடல்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்காத காரணத்தால் அவரால் தமிழில் இன்னும் முன்னணிக்கு வர முடியவில்லை.
இந்நிலையில் இந்தியத் திரையுலகில் அடுத்த பிரம்மாண்ட படம் என எதிர்பார்க்கப்படும் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளுக்கு அவர் இசையமைக்கிறார். ஹிந்திக்கு வேறு ஒருவர் இசையமைக்க உள்ளார்.
இதற்கு முன்பு விஜய் தேவரகொன்டா நடித்த 'டியர் காம்ரேட்' தெலுங்குப் படத்திற்கு இசையமைத்த ஜஸ்டினுக்கு தெலுங்கில் இரண்டாவது படம்தான் 'ராதே ஷ்யாம்'. தெலுங்கில் சில முன்னணி இசையமைப்பாளர்கள் இருக்க, ஜஸ்டினுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது தெலுங்குத் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.