பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கும் படம் WWW (Who, Where, Why). இதில் ஆதித் அருண் என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார். தெலுங்கில் அறிமுகமான ஷிவானி தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
இது குறித்து இயக்குனர் கே.வி.குகன் கூறியதாவது: படத்தின் டீஸரை, விஜய் சேதுபதி வெளியிட்டது எங்கள் அனைவருக்குமே பெருமை. படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜேசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் கூறினார்.
நடிகர் ஆதித் அருணை அவருக்கு நெடுங்காலமாக தெரியும். நடிப்பின் மீதான ஆதித் அருணின் தீவிரமான காதலையும் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டினார். முழுப்படத்தில் அவரது நடிப்பை காண ஆவலாக இருப்பதாக கூறினார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.