ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
திரைப்பட நடிகைகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பாலிவுட் நடிகைகள் பலரும் 50 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார்கள்.
ஆனால், தென்னிந்திய நடிகைகள் அதிகபட்சமாக 15 மில்லியன் பாலோயர்களை மட்டுமே பெற்றுள்ளார்கள். இதுவரையில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகையாக காஜல் அகர்வால் உள்ளார். அவருக்கு 17.3 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். அவருக்கு அடுத்து ரகுல் ப்ரீத் சிங் 16.2 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஸ்ருதிஹாசன் 15.7 மில்லியன் பாலோயர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தற்போது நடிகை சமந்தா 15 மில்லியன் பாலோயர்களைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இளம் முன்னணி நடிகைகளான ராஷ்மிகா, பூஜா ஹெக்டே ஆகியோர் 12 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளனர்.
திருமணமான பின்னும் சமந்தா தனக்கான இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படத்திலும், தெலுங்கில் விரைவில் 'சாகுந்தலம்' படத்திலும் நடிக்க உள்ளார்.