2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சாதனை புரியும் 30 வயதிற்குக் கீழுள்ள சாதனையாளர்களை 'போர்ப்ஸ் இந்தியா 30, 30க்குக் கீழ்' என்ற தலைப்பில் பெருமைப்படுத்துகிறது.
கடந்த 2020ம் ஆண்டிற்கான அந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்துள்ளார். ஆன்லைன் விண்ணப்பங்கள், நடுவர் சிபாரிசுகள், போர்ப்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்கிறார்கள்.
அந்தப் பட்டிலில் என்டர்டெயின்மென்ட் பிரிவில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். நெட்பிளிக்ஸ் 'புல்புல்'லில் சிறப்பாக நடித்த நடிகை திரிப்தி டிம்ரியும் அந்தப் பிரிவுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு, அறிவியல், சமூக சேவை, இசை, மருத்துவம், தொழில், நிதி, உணவு, பேஷன், கல்வி, டிஜிட்டல், ஈகாமர்ஸ், விவசாயம், கலை, விளம்பரம் என பல்வேறு பிரிவுகளில் இப்படி 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தென்னிந்திய அளவில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே அதில் தேர்வாகி உள்ளார். “போர்ப்ஸ் 30 பட்டியலில் தேர்வாகியுள்ளது பெருமையாக உள்ளது,” என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.