ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
சென்னை : ‛‛மழை கொட்டும் நேரத்தில் கொட்டும் அது எப்படி கொட்டும் என சொல்லமுடியுமா? அப்படித்தான் பாடலும் அந்தந்த சமயத்திற்கு ஏற்றபடி பாடல் உருவாகும். அதை கேட்பதே உங்கள் தலையெழுத்து, என இளையராஜா கூறினார்
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, கோடம்பாக்கத்தில் புதிதாக ஸ்டூடியோ ஒன்றை திறந்தார். முதல் பாடலாக வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு ஒலிப்பதிவு செய்தார். வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின் இளையராஜா அளித்த பேட்டி: பன்மொழிப்படங்கள் தயாராகும் சென்னையில் இருந்தத ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. ஒரு காலத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக விஜயா வாஹினி இருந்தது. அந்த ஸ்டூடியோ இன்று இல்லை. ஜெமினி, சாரதா, கோல்டன், ஏ.வி.எம்., ஸ்டூடியோ, விஜயா கார்டன் என பல ஸ்டூடியோக்கள் இன்று இல்லை. இந்த வரிசையில் பிரசாத் ஸ்டூடியோவும் சேர வேண்டும் என வெளியே வந்துவிட்டேன். என்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி, ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளேன். இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளது. அதன் பின் பாடல் ஒலிப்பதிவு முழுவீச்சில் தொடர்ந்து நடக்கும்.
கடந்து வந்த வாழ்க்கைக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது. சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. அது இப்படித் தான் கொட்டும் என சொல்ல முடியுமா? எந்தச் சமயத்தில் இசை எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் ரசிகர்கள் கேட்டாக வேண்டும். அதுதான் அவர்களின் தலையெழுத்து; மாற்ற முடியாது.
இன்றைய காலத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவமில்லை. பாடல்தான் முக்கியத்துவத்தை எடுக்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. பாடல்கள் ரசிகர்களைப் பிடித்து இழுக்க வேண்டும்.
இவ்வாறு, இளையராஜா கூறினார்.