லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்கார கலைக்கான அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர். தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம்எல்ஏ.,வுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது : எங்கள் தலைவி ஜெயலலிதா சினிமாவிலிருந்து வந்தவர். அவர் சொன்ன நல்ல கருத்துக்களை கேட்டுதான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம். எனக்கு செய்தி துறை அமைச்சர் பதவியை அம்மா அளித்த போது அதில் என்னவெல்லாம் பிற துறைகள் இடம் பெறும் என்பதை சொல்லி சினிமா துறையும் அதில் இருக்கும், அதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். சினிமா துறை மின்சாரம் போன்றது நன்கு ஒளி தரும், தவறுதலாக கைவைத்தால் ஷாக் அடித்துவிடும் என்று அறிவுரை வழங்கினார்.
சினிமா துறைக்காக திரைப்பட ஸ்டுடியோ அமைக்க பையனூரில் 5 கோடி செலவில் சினிமா ஸ்டுடியோ அமைத்து தருவதாக அறிவித்ததுடன் நிதியும் அளித்தார். அவர் வழியை பின்பற்றி 150 படங்களுக்கு தலா ரூ 7 லட்சம் மானியம் அளித்தார் தற்போதைய முதல்வர். அதேபோல் கொரோனா காலகட்டத்தில் சினிமா துறை பாதிக்கப்பட்டிருந்தபோது நிறைய உதவிகளை அரசு அளித்தது. மீண்டும் தொழில் தொடங்கவும் உடனுக்குடன் அனுமதி அளிக்கப்பட்டது.
தியேட்டர்களில் முதலில் 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்தது தமிழக அரசுதான். ஆனால் அன்றைக்கு 50 சதவீத டிக்கெட் தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியது. 15 நாட்கள் கழித்து இன்று மத்திய அரசே 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்திருக்கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக அரசுதான் செயல்பட்டது என்பதை குறிப்பிடுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.