அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
1965ம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிற ஆடை” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, கலையுலகில் ஓர் நிலையான இடம் பிடித்த நட்சத்திர நாயகிதான் ஜெ ஜெயலலிதா. பரதநாட்டியம், குச்சிப்புடி, மணிப்புரி போன்ற நடனக் கலைகளை முறைப்படி கற்றறிந்ததோடு, கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டினையும் நன்கு அறிந்திருந்ததோடு, இவர் நாயகியாக பயணித்திருந்த காலகட்டங்களில் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெற்ற நடிகையாகவும் அறியப்பட்டிருக்கின்றார்.
மேலும் தான் நடிக்கும் படங்களில் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்றாற்போல் தனக்கான ஆடை அணிமணிகள் இருப்பது மட்டுமின்றி அவைகள் அந்தந்த காலகட்டத்தில் அனைவரும் பேசும் வண்ணம் நவநாகரீக ஆடை வடிவமைப்பைக் கொண்டதாகவே இருக்கும். இவரது முதல் படமான “வெண்ணிற ஆடை” தொடங்கி கடைசி திரைப்படமான “நதியைத் தேடிவந்த கடல்” வரையிலுமே இதை நாம் காண இயலும். அவ்வாறு இவர் வித விதமான ஆடை அணிமணிகள் அணிந்து நடித்த ஒரு திரைப்படம்தான் “தர்மம் எங்கே?”.
கொடுமை, அடக்குமுறைகளால் நல்லவர்கள் எல்லாம் நலிவுற்று துன்பத்திற்கு ஆளாகும் ஒரு அந்நியனின் ஆட்சி நடைபெற்று வரும் நாட்டில், அவைகளை எல்லாம் தட்டிக் கேட்டு, தர்மத்தை நிலைநாட்ட நாட்டுப் புறத்திலிருந்து வரும் ஒரு இளைஞனின் போராட்டத்தை மய்யப் படுத்தி சொல்லப்பட்ட ஒரு ராஜா ராணிக் கதைதான் இந்த “தர்மம் எங்கே?” திரைப்படம். “விவா சப்போட்டா” என்ற ஆங்கில திரைப்படத்தின் சாயலில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கடலூரிலும், ஏ வி எம் ஸ்டூடியோவிலும் படமாக்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நாயகனாக நடித்திருந்த இத்திரைபடத்தை தனது “சாந்தி பிலிம்ஸ்” மூலமாக தயாரித்தும் இருந்தார்.
படப்பிடிப்பிற்கு முன்பே “சாந்தி பிலிம்ஸ்” பெரியண்ணன் படத்தின் நாயகியான ஜெயலலிதாவின் வீட்டிற்கே சென்று, உங்களுக்குப் பிடித்தமான உடையலங்காரம் செய்து கொள்ள உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. என்ன வகை துணி வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். புதுமாதிரியான வடிவமைப்புகளில் உங்கள் உடைகளையும் தயாரித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதோடு, வெல்வெட் மற்றும் நவநாகரீக துணி வகைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. ஜெயலலிதாவே தனக்கான ஆடைகளை தானே வடிவமைத்துக் கொண்டார்.
இருபதுக்கும் அதிகமான தோற்றங்களுடன் “தர்மம் எங்கே?” திரைப்படத்தில் தோன்றி நடித்தும் இருந்தார் ஜெயலலிதா. இதே காலகட்டத்தில் வெளிவந்த “ராமன் தேடிய சீதை” திரைப்படத்தில் எம் ஜி ஆரோடு இணைந்து நடித்திருந்த ஜெயலலிதா, அதிலும் ஏராளமான ஆடம்பர ஆடைகளில் தோன்றி நடித்திருந்தாலும், இன்னும் வித விதமான ஆடை அலங்காரங்களில் தோன்றி நடிக்க வேண்டும் என்றிருந்த ஜெயலலிதாவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றித் தந்த படமாகவும் அமைந்திருந்ததுதான் இந்த “தர்மம் எங்கே?” திரைப்படம்.