இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் படம் அரண்மனை-3. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராசிகண்ணா, சாக்ஷிஅகர்வால், விவேக், யோகிபாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இப்படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட்டை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அரண்மனை-3 படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருப்பதோடு, அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகவும், நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட அவர்கள் இருவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.