குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். இந்த படத்தில் இவர்கள் இணைந்து நடித்தாலும் காதலர்கள் இல்லை. போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்தார்கள். அந்த படத்தில் காதல், டூயட் இல்லாத குறையை இப்போது தீர்க்க இருக்கிறார்கள்.
அருண் விஜய் முதன் முறையாக தனது மச்சான் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இது ஹரியின் வழக்கமான வில்லேஜ் ஆக்ஷன் படம். அருவா, டாட்டா சுமோ, வெள்ளைவேட்டி வில்லன் என பழைய பேக்கேஜோடு மீண்டும் வருகிறார். இந்த கதை சூர்யாவுக்கு சொன்ன கதை என்றும் அவர் நடிக்க மறுத்ததால் அருண் விஜய்யை நடிக்க வைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். விரைவில் இதன் படப்பிடிப்புகள் நடக்கிறது.