சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவுதமி! | குழந்தைகள் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட விழிப்புணர்வு செய்தி! | சொர்க்கவாசலில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை | 'எனை சுடும் பனி': மீண்டும் ஒரு பொள்ளாச்சி கதை | 'ப்ரீடம் அட் மிட்நைட்': இன்று வெளியானது | பிளாஷ்பேக்: லைவ் சவுண்டில் உருவான 'தூரத்து இடி முழக்கம்' | யஷ், நயன்தாரா படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் | பிளாஷ்பேக்: அந்த காலத்து வாலிபர் சங்கம் | லக்கி பாஸ்கரை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீஸ்! | வெண்ணிலாவாக தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு |
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஜில்லா'. அப்படத்தை ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். அப்படத்திற்குப் பிறகு இதுவரை வேறு படம் எதுவும் இயக்கும் வாய்ப்பு நேசனுக்குக் கிடைக்கவில்லை.
தற்போது தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிக்க உள்ள புதிய படத்திற்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் நேசன். ராமிற்குக் கதை பிடித்தால் அப்படத்தை நேசன் இயக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராம் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ரெட்' படம் வியாபார ரீதியாக வசூலைக் கொடுத்து வருகிறது.
ஆர்.டி. நேசனைப் போலவே விஜய் நடித்த “வேட்டைக்காரன், சுறா, புலி, பைரவா” படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு அடுத்த பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.
இவர்களில் 'வேட்டைக்காரன்' படத்தை இயக்கிய பாபு சிவன் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இயற்கை எய்தினார். 'சுறா' படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் அடுத்து இயக்கிய இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் ஓடவேயில்லை. 'புலி' படத்தை இயக்கிய சிம்புதேவன் 'கசடதபற' என்ற படத்தை இரண்டு வருடங்களாக இயக்கி வருகிறார். , 'பைரவா' படத்தை இயக்கிய பரதன் அடுத்த பட வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார். விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதனை மீண்டும் அழைத்து 'பைரவா' வாய்ப்பைத் தந்தார் விஜய்.
ஆனால், மேலே குறிப்பிட்ட மற்ற இயக்குனர்களுக்கு மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை அவர் தரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.