புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த 'புதுப்பேட்டை' படம் 2006ம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்த போது வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், அதற்கு மாறாக தமிழ் சினிமாவில் முக்கியமானதொரு படம் என ரசிகர்கள் அப்படத்தை இன்று வரை பாராட்டி வருகிறார்கள்.
செல்வராகவன், தனுஷ் ஆகிய இருவரின் ரசிகர்களும் 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பீர்கள் என அவர்களிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, அவர்கள் கூட்டணியில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை புத்தாண்டு அன்று வெளியிட்டார் செல்வராகவன். அப்போது கூட ரசிகர்கள் 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்தைப் பற்றிக் கேட்டனர்.
ஆனால், செல்வராகவன், தனுஷ் மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து அப்படத்தின் தலைப்பு 'நானே வருவேன்' என்ற அப்டேட்டும் வெளியானது. 'புதுப்பேட்டை 2' பற்றி எதுவுமே சொல்லவில்லை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் 'நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2' படங்களுக்கு இடையில் 'புதுப்பேட்டை 2' கண்டிப்பாக வரும் எனத் தெரிவித்துள்ளார். 'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் 2024ம் ஆண்டுதான் உருவாக உள்ளது. 'நானே வருவேன்' இந்த ஆண்டிலேயே முடிந்துவிடும். அதற்குள் 'புதுப்பேட்டை 2' படத்தை முடித்துவிட வாய்ப்புள்ளது.