ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட். தமிழில் பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி இயக்கி உள்ளார். கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.
இவருடன் 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான பானு ஸ்ரீரெட்டி இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கிறார், கவாஸ்கர் அவிநாஸ் இசை அமைத்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் ஷிவா மேடி கூறியதாவது: பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது. விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது. என்றார்.