திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் |
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடித்து, 2015ல் வெளியாகி, வெற்றி பெற்ற படம் 'இன்று நேற்று நாளை'. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்த தயாரிப்பாளர் சிவி.குமார், நேற்று படத்தை துவக்கினார். ஏற்கனவே நடித்த நடிகர்களுடன், இன்னும் புதியவர்கள் சிலர் இரண்டாம் பாகத்தில் இணைகின்றனர். ரவிக்குமாரின், கதை, திரைக்கதையை வைத்து அவரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் பொன்ராஜ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசை. இது சிவி.குமாரின் 25வது படமாகும்.