மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரானோ தொற்று பரவ ஆரம்பித்ததும் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் எட்டு மாதங்கள் கழித்து நவம்பர் 10ம் தேதி தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் தீபாவளிக்கு சில படங்கள் வந்தாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை.
கடந்த இரண்டு மாதங்களாக 40 படங்கள் வரை வெளிவந்தாலும் மக்கள் வராத காரணத்தால் அந்தப் படங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தன. மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்க விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தால் மட்டும்தான் முடியும் என்று தியேட்டர்காரர்கள் நம்பினார்கள்.
அதற்கேற்றபடி கடந்த இரண்டு நாட்களாக இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், நேற்று வெளியான 'ஈஸ்வரன்' படத்திற்கும் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.
இப்படங்களுக்கான விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை, பொங்கல் கொண்டாட்ட மனநிலையுடன் ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், 'மாஸ்டர், ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களுமே மிகவும் சுமாரான படங்கள்தான். இந்தப் படங்கள் இபோதுள்ள கொரானோ சூழ்நிலையில் சாதாரண நாட்களில் இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பு கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
கடந்த பத்து மாதங்களாக ஓடிடியில் படங்களைப் பார்க்க மக்கள் பழகிவிட்ட நிலையில் மீண்டும் அவர்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தது ஆச்சரியம்தான்.
அதிக டிக்கெட் விலை, உணவு பண்டங்கள் விலை இப்போதும் மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் நியாயமாக வைத்து, நல்ல தரமான படங்களைக் கொடுத்தால் மட்டும்தான் மீண்டும் வந்த மக்களை திரும்பத் திரும்ப வரவழைக்க முடியும். அதற்கான பொறுப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தினருக்கும் உண்டு. அதைச் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.