மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து விட்டது. இறுதிப்போட்டிக்கு சோம், ஆரி, பாலாஜி, ரியோ, கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து போட்டியில் இருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை வந்த நடிகர் கவின், பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து, திடீரென வெளியேறினார். இந்த சீசன் நிறைவு பெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இப்போதும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை பிக்பாஸ் வழங்கியுள்ளார். இந்த முறை பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே கேப்ரில்லா வெளியேறி விட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கேப்ரில்லாவின் ஸ்மார்ட் மூவ் என இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவிலும் வைரலாக பரவி வருகிறது.
மீதமிருப்பவர்களில் சோம், ஆரி, பாலா ஆகிய மூவரும் போட்டியின் இறுதிநாள் வரை நிச்சயம் இடம் பிடிப்பார்கள் என உறுதியாகிவிட்ட நிலையில் நாலாவது நபராக ரியோ இடம்பெறுவார் என தெரிகிறது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் ரம்யா பாண்டியன் போட்டியின் இறுதி நாளுக்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.