கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கோபிசந்த் மலிநேனி இயக்கத்தில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்த கிராக் தெலுங்குப் படம் இன்று வெளியாக வேண்டிய படம். ஆனால், படத்தின் காலைக் காட்சிகளை பைனான்ஸ் சிக்கலால் ரத்து செய்துள்ளனர்.
நேற்றே இப்படத்தின் அமெரிக்க பிரிமீயர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆந்திரா, தெலங்கானா மற்றும் படம் வெளியாகும் மற்ற இடங்களிலும் இன்றைய காலை 9 காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இப்படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் மது, இதற்கு முன்பு விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன் நடித்த அயோக்யா படத்தைத் தயாரித்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் நஷ்டமடைந்தது. அந்தப் படத்திற்காக அவர் பைனான்சியர்களிடம் வாங்கிய 25 கோடி ரூபாய் கடனை கிராக் வெளியீட்டிற்கு முன்பாக அடைக்காத காரணத்தால் அவர்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கிவிட்டார்களாம்.
தற்போது வரை பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதில் சுமூகத் தீர்வு ஏற்பட்டால் பகல் காட்சிகளில் படம் வெளியாகும் என்கிறார்கள்.
தெலுங்கில் தாகூர், கஜினி, ஸ்டாலின், அயோக்யா உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் மது.