'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் பரோல். இதில் பீச்சாங்கை படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் நடிக்கிறார். அவருடன் மோனிஷா, லிங்கா, கல்பிக்கா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ட்ரிப்பர் என்டர்டைன்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரிக்கிறார், மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ்குமார் அமல் ஒளிப்பதிவு செய்கிறார்.
"ஒரு கொலை வழக்கில் சிறையில் தண்டனையை அனுபவவித்து வரும் அண்ணனை தம்பி பரோலில் எடுத்து வருகிறார். அது தம்பிக்கே பிரச்சினையாக முடிகிறது. அது என்ன என்பதுதான் கதை. அண்ணன், தம்பி பாசத்தை வித்தியாசமான களத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். கதை திருச்சியில் ஆரம்பித்து சென்னை, கோவை, சேலம் என பயணிக்கிறது. செண்டிமெண்ட் கலந்து ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது" என்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா.