மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் |
'கேஜிஎப் சேப்டர் 2' என்ற கன்னடப் படத்தின் டீசரில் மிஷின் கன்னை வைத்து 'கடகடகட' என சுட்டுத் தள்ளி, அதனால் நெருப்புப் பிழம்பான அந்த 'கன்'னில் சிகரெட்டைப் பற்ற வைக்கும் 'ராக்கி' ஒரு பக்கம் 3 கோடி பார்வைகளை, 3 கோடி லைக்குகள் என புதிய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கம் தமிழ் 'ராக்கி' டீசரில், சேரில் கட்டப்பட்டுள்ள ஒருவனின் தலையை 'கரகரகர' என கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து தள்ளுகிறார் இன்னொரு ராக்கி.
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ராக்கிகளும் வன்முறையின் உச்சகட்டம் எப்படி இருக்கும் என நம்மை பயமுறுத்துகிறார்கள். 'கேஜிஎப்' ராக்கியாவது பரவாயில்லை, மிஷின் கன்னால் நான்கைந்து கார்களை சுட்டுத் தள்ளுகிறார். ஆனால், 'ராக்கி'யின் ராக்கி கொடூரமாகக் கழுத்தை அறுப்பது எல்லாம் டீசரில் பார்க்கும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கும் எனத் தெரியவில்லை.
இந்தக் கொடூரமான தமிழ் 'ராக்கி' படத்தைத்தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி இணைந்து வழங்க உள்ளது. கன்னட 'ராக்கி' 3 கோடி பார்வைகளை நெருங்கிச் செல்ல, இந்த தமிழ் 'ராக்கி' 2 லட்சம் பார்வைகளை மட்டுமே தாண்டியுள்ளார்.