அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயாபச்சன், ஷபனா ஆஸ்மி மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 28ல் வெளிவந்த ஹிந்திப் படம் 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி'. கரண் ஜோஹர் சினிமாவில் நுழைந்த 25வது வருடத்தில் வெளியாகியுள்ள படம் இது. 2016ல் வெளிவந்த 'ஹே தில் ஹை முஷ்கில்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களாக திரைப்படங்கள் எதையும் கரண் இயக்கவில்லை.
“லஸ்ட் ஸ்டோரிஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ்” ஆகிய வெப் தொடர்களில் ஒரு பகுதியை மட்டும் இயக்கியிருந்தார். தமிழில் வெளிவந்த 'ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்' படங்களின் சாயலில் வெளிவந்த 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் பெரிய சாதனையைப் படைக்கவில்லை. இருப்பினும் கடந்த பத்து நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. தற்போது 105 கோடி வசூலைப் பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரூ.100 கோடி வசூலைக் கடந்த ரன்வீர் சிங்கின் 8வது படமாகவும், ஆலியாவின் 8வது படமாகவும் இப்படம் அமைந்துள்ளது.