செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
திரையுலகில் அழகான நாயகிகள் என்றால் ஆக்ஷன் ஹீரோக்களுக்கும் பிடிக்கத்தானே செய்யும். இந்தியத் திரையுலகின் இன்றைய அழகான இளம் ஹீரோயின்களில் ஒருவர் தீபிகா படுகோனே.
கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா, ஹிந்தியில் ஷாரூக்கான் நாயகனாக நடித்து 2007ல் வெளிவந்த 'ஓம் ஷாந்தி ஓம்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது '83' படத்தில் நடித்து முடித்துள்ள தீபிகா அடுத்து இரண்டு ஹிந்திப் படங்களிலும், பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.
நேற்று தீபிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரபாஸ் 'அழகான சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார். தன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு சக பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார் தீபிகா.