ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என திரையுலகினர் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று அரசு இன்று 100 சதவீத இருக்கை அனுமதிக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
“சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் ஆகியவை ஏற்கெனவே உள்ள 50 சதவீத அனுமதியிலிருந்து 100 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளுடன் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்படுகிறது. திரைப்படக் காட்சிகளுடன் கோவிட் 19 பற்றிய முன்னெச்சரிக்கை விஷயங்களைத் திரையிட்டு படம் பார்க்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவிற்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.