டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

விஜய்யின் கடைசி படமாக பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள படம் 'ஜனநாயகன்'. இப்படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 6 நிமிடம் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் எவ்வளவு நீளமாக இருந்தாலும் ரசிகர்கள் தாங்குவார்கள் என படக்குழு நினைத்திருக்கலாம். விஜய் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் ஷங்கர் இயக்கிய 'நண்பன்' படம் 3 மணி நேரம் 1 நிமிடங்கள் ஓடக் கூடிய படமாக இருந்தது. அந்தப் படத்தின் நீளத்தை விட 5 நிமிடக் கூடுதலில் 'ஜனநாயகன்' சாதனை படைத்துள்ளது.
தீவிர அரசியலில் இறங்கி, 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி போட்டியிட இருக்கிறது. அதனால், இந்தப் படத்தின் பன்ச் வசனங்களுக்குப் பஞ்சமிருக்காது என்கிறார்கள். இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று ஒரு புறம் செய்திகள் வெளிவந்தாலும் படக்குழு அது பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை.
2023ல் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் நீளம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள். அப்படத்தை அப்படியே ரீமேக் செய்ய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால் இப்படத்தை விடவும் 'ஜனநாயகன்' படம் 24 நிமிடங்கள் கூடுதலாக உள்ளது.