75, 50, 25 : ரஜினிகாந்த் பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாட்டம் | ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு |

பழம்பெரும் இயக்குனரான டி ஆர் ராமண்ணா 1980களிலும் படங்களை இயக்கினார். அதில் ஒரு படம் தான் 'இலங்கேஸ்வரன்'. ராமாயணத்தில் வரும் தனித்தனி கதாபாத்திரங்களை கொண்டு ஏராளமான படங்கள் வந்திருந்த போதும் முதல் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த படத்தில் இயக்கியிருந்தார்.
இலங்கேஸ்வரனாக நடிக்க அன்றைய முன்னணி நடிகர்கள் தயங்கிய நிலையில் கடைசியாக நடிகர் ராஜேஷ் இலங்கேஸ்வரனாக (ராவணனாக) நடிக்க வைத்தார். கே ஆர் விஜயா மண்டோதரியாகவும், ரேவதி சீதாவாகவும் ஸ்ரீபிரியா சூர்ப்பனயாகவும் நடித்தனர். ஸ்ரீ சிவகாமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கே. முனிரத்னம் தயாரித்தார். எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். படம் வெற்றி பெறவில்லை.