சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‛டியர் ரதி' | 75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை |

பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்த ப்ராங்க் ஸ்டார் ராகுல் "கிராண்ட் பாதர்" படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். பேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக் ஷன் கலந்த உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகளாக உருவாகும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் , மைம் கோபி, ஹரீஷ் பேரடி உட்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ ஆக நடிக்கிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ப்ராங்க் ஸ்டார் இயக்கும் படம் என்பதால் படத்தில் காமெடியும் இருக்குதாம்.