சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? | ஆர்யா 40வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அடுத்த படம் ஜெயிலர் 2 வா? : சந்தானம் அளித்த பதில் | ‛சிறகடிக்க ஆசை' டிவி தொடர் நடிகை தற்கொலை |

குடும்ப பிரச்னை, வறுமை காரணமாக தனது 7 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை தமிழ்நாட்டில் பிரபலம். நாட்டுப்புற ஒப்பாரி பாடல்களில் நல்லதங்காள் கதை பாடப்பட்டது. வில்லுப்பாட்டாக இசைக்கப்பட்டது. பிற்காலத்தில் சிலரால் நாடகமாகவும் நடத்தப்பட்டது.
இந்த கதை 1935ம் ஆண்டு திரைப்படமாக உருவானது. பி. வி. ராவ் இயக்கத்தில் ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் எம். எஸ். தாமோதர ராவ், சி.எஸ்.ஜெயராமன், கே.ஆர். காந்திமதி பாய், பி. எஸ். சிவபாக்கியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இதே கதை 1955ம் ஆண்டு மீண்டும் உருவானது. பி.வி.கிருஷ்ண அய்யர் இயக்கினார், ஆர்.எஸ்.மனோகர், ஜி.வரலட்சுமி, ஏ.பி.நாகராஜன், சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மதராஸ் மூவிடோன் தயாரித்திருந்தது. இரண்டு படங்களுமே மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 'நல்லதங்காள்' கதை மறைந்து விட்டது.