'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

இயக்குனர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு உட்பட பல படங்களில் நடித்தார். பண்டிகை பட இயக்குனர் பெரோசை திருமணம் செய்தார். இப்போது சற்றே இடைவெளிக்குபின் மிடில் கிளாஸ் படத்தில் முனிஸ்காந்த மனைவியாக நடித்துள்ளார்.
இது குறித்து விஜயலட்சுமி கூறுகையில் 'ஒரு மிடில்கிளாஸ் குடும்பத் தலைவியாக, ஒரு குழந்தை அம்மாவாக நடித்துள்ளேன். மிடில்கிளாஸ் குடும்பங்களின் கனவு, பொருளாதார நிலை, யூடியூப் மோகத்தை கதை பேசுகிறது' என்றார்.
இயக்குனர் பேசுகையில் 'இது குடும்ப, காமெடி படம் மாதிரி தெரிந்தாலும் ஒரு கட்டத்தில் திரில்லர் பாணிக்கு நகரும். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ராதாரவியும். ஒரு முக்கியமான வேடத்தில் வேல.ராமமூர்த்தியும் நடித்துள்ளனர். மாளவிகா அவினாஷ் சின்ன ரோலில் நடிப்பதில்லை என்று மறுத்தார். பின்னர், கதை கேட்டு நடித்துக் கொடுத்தார். பல படங்களில் காமெடியனாக இருந்த முனிஸ்காந்த் இதில் கதைநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு சொந்த ஊரில் நிலம் வாங்கி, செட்டில் ஆக ஆசை. ஆனால், சிட்டியில் சிறப்பாக வாழ நினைக்கிறார் விஜயலட்சுமி. அவர்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்லியிருக்கிறோம். மரகதநாணயம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த ஆக்சிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது' என்றார்.