டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய குடும்பங்களில் ஒன்று நடிகர் மோகன் பாபு குடும்பம். ரஜினியின் மிக நெருங்கிய நண்பர் மோகன்பாபு. அவருடைய மூத்த மகன் விஷ்ணு மஞ்சு, இளைய மகன் மஞ்சு மனோஜ், மகள் லட்சுமி மஞ்சு ஆகியோரும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த 'கண்ணப்பா' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அற்புதமாக உருவாக்கப்பட்ட அந்தப் படம் வசூல் ரீதியாக ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதே சமயம் மஞ்சு மனோஜ் வில்லனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'மிராய்' படம் 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அந்தப் படத்தில் மனோஜின் வில்லத்தன நடிப்பை திரையுலகினரே பாராட்டி வருகிறார்கள்.
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் தனுஷ், சாயா சிங் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'திருடா திருடி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'தொங்கா தொங்கடி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மஞ்சு மனோஜ். அதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். சூரி, சசிகுமார், நடித்து வெளிவந்த 'கருடன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'பைரவம்' படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார்.
'மிராய்' படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் பாராட்டியதை மனோஜ் தமிழிலேயே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனால்தான் அந்தப் படம் தமிழிலும் ரசிகர்களிடம் சென்றடைந்தது. தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்த 'மிராய்' வெற்றி தனக்கு தமிழிலும் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாராம் மஞ்சு மனோஜ்.