ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? | வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எனது கனவுத் திட்டம் : இயக்குனர் பொன்ராம் பேட்டி | பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | டைட்டிலை வைத்து விட்டதால் வேறு வழியின்றி பவன் கல்யாணின் பெயரை மாற்றினேன் : ஓஜி இயக்குனர் சுஜித் | டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி | பிளாஷ்பேக் : இப்படியும் நடந்திருக்கு | திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன் | மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி |

தெலுங்கில் கடந்த செப்டம்பர் மாதம் பவன் கல்யாண் நடிப்பில் தே கால் ஹிம் ஓ ஜி என்கிற படம் வெளியாகி வெற்றி பெற்றது. சுஜித் இயக்கியிருந்தார். பிரபாஸை வைத்து இவர் இயக்கிய சாஹோ படம் தோல்வி அடைந்த நிலையில் ஓஜி படத்தின் மூலம் மீண்டும் தனது திரையுலக பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளார். இந்த நிலையில் ஓஜி என்கிற டைட்டிலை ஏன் வைத்தேன் என்றும் அதனால் பவன் கல்யாண் கதாபாத்திர பெயரில் என்ன மாற்றம் நடந்தது என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் சுஜித்.
அவர் கூறும்போது, “நான் ஒரு நாள் வெளிநாட்டில் இருந்தபோது ஓஜி படத்தின் தயாரிப்பாளர் என்னை தொடர்பு கொண்டு நாளை படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட இருப்பதாக கூறினார். அப்போது படத்திற்கு டைட்டில் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கான போஸ்டரையும் டிசைன் செய்து எனக்கு அனுப்பினார்கள். ஆனால் அது மோசமாக இருந்தது. நான் ஊரில் இருந்த என்னுடைய உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு வித விதமான டிசைன்களை செய்து அனுப்பும்படி கூறினேன்.
அதில் நல்ல டிசைன்கள் வந்தது. ஆனால் அதற்கு பொருத்தமான டைட்டில் வைக்க வேண்டுமே என்று நினைத்த சமயத்தில் நான் என் மனதில் ஏற்கனவே டேக் லைனுக்காக யோசித்து வைத்திருந்த தே கால் ஹிம் ஓஜி என்கிற வார்த்தை திடீரென ஞாபகத்திற்கு வந்தது. உடனே அந்த போஸ்டரில் அதை வைத்து டிசைன் செய்ய சொல்லி தயாரிப்பாளருக்கும், பவன் கல்யாணுக்கும் அனுப்பினேன். அவர்கள் ஒப்புதல் கிடைத்து அந்த போஸ்டர் வெளியாகி வரவேற்பையும் பெற்றது.
ஆனாலும் படத்திற்கு நான் வேறு டைட்டில் தான் வைக்க தீர்மானித்து இருந்தேன். ஆனால் ரசிகர்களும் படக்குழுவினரும் இந்த டைட்டில் நன்றாக இருக்கிறது, அப்படியே இருக்கட்டும் மாற்ற வேண்டாம் என்று பெருமளவில் கருத்து தெரிவித்தனர். இதனால் நான் ஏற்கனவே பவன் கல்யாண் கதாபாத்திரத்திற்கு வைத்திருந்த பெயரை கொஞ்சம் மாற்றி ஓஜி என்று பெயர் வரும் விதமாக ஓஜாஸ் கம்பிரா என்று அவரது கதாபாத்திர பெயரை மாற்றினேன்” என்று கூறியுள்ளார்.