கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல |

டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் 'லோகா சாப்டர் 1: சந்திரா'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஒரு வாரத்தில் 100 கோடி வசூலைக் கடந்தது. தற்போது படம் 200 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் அது நடந்துவிடும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையாளத் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகத்திலும் கதாநாயகி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த படம் 100 கோடியை இதுவரை கடந்ததில்லை. அந்த சாதனையை 'லோகா' முதல் முறை புரிந்தது. அடுத்து 200 கோடி சாதனை என்பதும் பெரிய சாதனைதான்.
இதற்கு முன்பு மலையாளத் திரையுலகத்தில் 'எல் 2 எம்புரான், மஞ்சும்மல் பாய்ஸ், துடரும்' ஆகிய படங்கள் 200 கோடியைக் கடந்துள்ளன. இதில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் கடந்த வருடம் வெளிவந்தது. மற்ற மூன்று படங்களும் இந்த வருடத்தில் வெளியானவை. ஒரே வருடத்தில் 3 படங்கள் 200 கோடி வசூல் சாதனையைப் படைப்பது ஆச்சரியமான ஒன்று.