மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தமிழ் சினிமாவில், என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்னம், புலிமூட்டை ராமசாமி, கே.ஆர்.ராமச்சந்திரன் என பல காமெடி நடிகர்கள் இருந்த காதலத்தில் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர காமெடி நடிகர்கள் என்று யாரும் இல்லை. அங்கு பெரும்பாலும் புராண கதைகளை சினிமா ஆனதால் கமெடி நடிகர்கள் தனியாக தேவைப்படவில்லை.
என்றாலும் தெலுங்கு சினிமாவின் முதல் நட்சத்திர காமெடி நடிகராக கொண்டாடப்படுகிறவர் கே.சிவராவ் என்கிற கஸ்தூரி சிவராவ். மவுன படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் படக் கருவி ஆப்ரேட்டராகவும், கதை சொல்லியாகவும் இருந்தவர் சிவராவ். 'சிவராவ் வர்ணனை செய்யும் படம்' என்றே படத்திற்கு விளம்பரமும் செய்தார்கள்.
சினிமா பேசத் தொடங்கிய பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்த சிவராவ், 1945ம் ஆண்டு வெளியான 'சூடாமணி' என்ற படத்தின் மூலம் பிரபலமானார். 1949 இல் 'குணசுந்தரி கதா' திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகரானார், அதில் அவர் ஒரு சபிக்கப்பட்ட இளவரசராக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அவருடைய பாவனைகளும் வசனங்களும் மிகவும் பிரபலமடைந்ததால் மக்கள் அதே தொனியில் பேசத் தொடங்கினர். சிவராவ் பிற்காலத்தில் தயாராரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார்.