பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு |
மலையாளத் திரையுலகத்தில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் பிஜூ மேனன். 2020ல் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' படம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. தமிழில் 2005ல் வெளிவந்த 'மஜா' படத்தில் அறிமுகமானார். அதன்பின் 'ஜுன் ஆர், தம்பி, பழனி, அரசாங்கம், அலிபாபா, போர்க்களம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 'மதராஸி' படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், “ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், 'மதராஸி' படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி. எனது கதாபாத்திரத்தை அற்புதமாக அமைத்துள்ளார் அவர். நான் அனிருத்தின் பெரிய ரசிகன். சிவகார்த்திகேயனும் சிறப்பாக வளர்ந்துள்ளார். மலையாளத்திலும் தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது,” என்று பேசினார்.
பிஜூ பற்றி சிவகார்த்திகேயன் பேசுகையில், “பிஜூ மேனன் சாரின் ரசிகன் நான். குறிப்பாக 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பானது. குரலை எப்படி ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடிப்பது என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்,” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.