ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான ‛திரிஷ்யம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி அதுவும் முதல் பாகத்திற்கு சமமான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து இயல்பாகவே மூன்றாவது பாகம் எப்போது என ரசிகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது திரிஷ்யம் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளில் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஈடுபட்டுள்ளார். படப்பிடிப்பும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் ‛‛திரிஷ்யம் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களைப் போல மூன்றாம் பாகம் இருக்காது அதில் ஒரு புதுவிதமான ட்ரீட்மென்ட் கொடுக்க இருக்கிறேன்'' என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னை பொறுத்தவரை விதவிதமான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்னுடைய மெமரீஸ் மற்றும் திரிஷ்யம் படங்களை பார்த்துவிட்டு தயாரிப்பாளர்கள், பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு இது போன்ற கதைகள் தான் நன்றாக இருக்கிறது என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இது போன்ற த்ரில்லர் மற்றும் காமெடி படங்களையே தொடர்ந்து கொடுத்தால் ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும். அதனால் இந்த படத்திற்கு பிறகு கொஞ்ச நாளைக்கு நான் திரில்லர் பாதையை விட்டு விலகி பயணிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.