செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி திரைப்படம் 'வார் 2'. இப்படம் 300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியாவில் 240 கோடி, வெளிநாடுகளில் 60.5 கோடி என மொத்தமாக 300.5 கோடியை வசூலித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இருந்தாலும் பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி இப்படம் இன்னும் 300 கோடி வசூலித்தால்தான் லாபத்தைப் பெற முடியும் என தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு வசூலிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். படத்திற்கு முதல் ஓரிரு நாட்கள் மட்டுமே வரவேற்பு இருந்தது. விமர்சனங்கள் வெளியான பின்பு படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டவில்லை என்பது உண்மையாகிவிட்டது.
ஜுனியர் என்டிஆர் நடித்ததால் தெலுங்கு மாநிலங்களில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. இதனால், படம் நஷ்டத்தை சந்திப்பதை தவிர்க்க முடியாது என்றே சொல்கிறார்கள்.