பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

கேரளாவை சேர்ந்தவர் மோனிஷா பிளெஸ்சி. அம்மா தமிழ் நாடு. பிறந்து, வளர்ந்தது சென்னை. மீடியா மீதிருந்த ஆர்வம் காரணமாக மியூசிக் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினார். சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தில் அவரது தங்கையாக சினிமாவில் அறிமுகமானார். விஜய்யின் 'ஜனநாயகன்', விஜய் ஆண்டனியின் 'லாயர்' படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து கவனம் பெற்றுள்ளார்.
கூலி படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறும்போது " கூலி' படத்தில் நடித்தது இப்போதும் கனவு போல் இருக்கிறது. படத்தில் ஹாஸ்டல் சண்டைக் காட்சியில் நடித்தபோது, எனது நடிப்பை கைதட்டி ரஜினிகாந்த் சார் பாராட்டியது மறக்க முடியாது. இப்போது விஜய் சாருடன் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறேன். இது தவிர விஜய் ஆண்டனியின் 'லாயர்' படமும் இருக்கிறது.
சினிமாவில் நுழைந்த காலத்திலேயே ரஜினி சார், விஜய் சார், சிவா என மூவருடன் நடித்துவிட்டது பெருமையாக இருக்கிறது. ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் கிடையாது. காரணம், காதல் காட்சிகளில் பாடல்களில் நான் பொருந்துவேனா எனக்கு தெரியாது. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறேன். பஹத் பாசில், சாய் பல்லவி ஆகியோருடன் நடிக்க விரும்புகிறேன். வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார் மோனிஷா பிளெஸ்சி.