சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் முன்பதிவு நேற்று முதல் இந்தியாவில் ஆரம்பமானது. தமிழ்ப் படங்களுக்கென்று தனி வரவேற்பு இருக்கும் கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் இப்படத்திற்கான முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் இருக்கும். ஆனால், மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே காட்சிகள் ஆரம்பமாகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை.
இதனிடையே, பெங்களூரு மாநகரில் இன்று காலை ஆரம்பமான முன்பதிவில் அதிகபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.2000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஸ்வாகத் ஷங்கர்நாக் தியேட்டரில் அதிகாலை 6.30 காட்சிக்கான டிக்கெட் கட்டணம் 2000 ரூபாயாக உள்ளது. அதற்கடுத்து 1500, 1000 ரூபாய் கட்டணங்கள். அவை அனைத்துமே உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
ரஜினி நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட கர்நாடகா நகரங்களில் பெரும் வரவேற்பு இருக்கும். சென்னையில் அதிகபட்ச கட்டணமாக ரூ.200 உள்ள நிலையில் பெங்களூருவில் அதைவிட 10 மடங்கு அதிகக் கட்டணம் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூலை இப்படம் நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.