ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'கல்கி' படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் 'கிங்டம்'. இதில் அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். சத்யதேவ் வில்லனாக நடிக்கிறார். கவுதம் தின்னனூரி இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன், ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. தமிழிலும் இதே பெயரில் வெளியாகிறது.
இலங்கையின் இயற்கை வளத்தை அபகரிப்பதற்காக அங்குள்ள மலைவாழ் மக்களை ஒரு சர்வதேச பயங்கரவாத கும்பல் அட்டகாசம் செய்வதும், அதை தடுத்து நிறுத்த இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் ஏஜெண்டாக விஜய் தேவரகொண்டா அனுப்பப்படுவதும்தான் படத்தின் கதை. 60 சதவீத படப்பிடிப்பு இலங்கையில் நடந்துள்ளது. தமிழகத்தில் தாண்டிக்குடி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் நடந்துள்ளது. தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு வருகிற 31ம் தேதி வெளிவருகிறது.