ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
ஜெர்ஸி பட இயக்குனர் கௌதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 12வது படமாக நடித்துள்ள படம் 'கிங்டம்' . இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ ப்ரோஸ் நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் கடந்த ஜூலை 4ம் தேதியன்று திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் பட பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதுவரை மூன்று முறை ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் கிங்டம் வருகின்ற ஜூலை 31ம் தேதியன்று வெளியாகிறது என்கிற புதிய ரிலீஸ் தேதியை அதிரடியான ஆக்ஷன் புரொமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.