பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் ஆளுமையாக அறியப்பட்டு, இலக்கியத்திற்கான “ஞானபீட விருது” பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவராக போற்றப்பட்டவர்தான் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். இவரது இலக்கிய படைப்புகளில் சில திரைப்படங்களாக வெளிவந்து, தமிழ் திரையுலகிற்கும் பெருமை சேர்த்திருக்கின்றன. “யாருக்காக அழுதான்?”, “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “உன்னைப் போல் ஒருவன்” போன்ற இவரது சில நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று, தமிழ் இலக்கியத்தின்பால் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்த திரைப்படங்களாகவும் இருந்திருக்கின்றன.
அந்த வகையில் இவரது “கை விலங்கு” என்ற நாவலுக்கு திரைவடிவம் தந்து, “காவல் தெய்வம்” ஆக்கித் தந்தவர்தான் குணச்சித்திர நடிகரும், தயாரிப்பாளருமான மறைந்த நடிகர் எஸ் வி சுப்பையா. “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, பாரதியாகவே வாழ்ந்து காட்டியிருந்த இந்த ஒப்பற்ற திரைக்கலைஞர், ஒரு புத்தகப்பிரியர். புத்தகம் வாசிப்பதில் ஆர்வமுள்ளவரான இவர், எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பை விரும்பும் ஒரு தீவிர வாசகரும் ஆவார். திரைப்படம் என்று ஒன்று நான் தயாரித்தால் அது எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடும் இருந்தவர்தான் நடிகர் எஸ் வி சுப்பையா.
அந்த வகையில் ஜெயகாந்தனின் “கை விலங்கு” என்ற நாவலை தனது “அம்பாள் புரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்திற்காக “காவல் தெய்வம்” என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்தும் வெளியிட்டார். ஒரு நேர்மையான, மனிதாபிமானமிக்க சிறைக் கண்காணிப்பாளருக்கும், அங்குள்ள சிறைக் கைதிகளுக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிபூர்வமிக்க, சுவாரஸ்யமான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த “காவல் தெய்வம்” திரைப்படத்தின் மய்யக் கருத்து. இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 'சாமுண்டி' என்ற மரண தண்டனைக் கைதியாக ஒரு நீண்ட கவுரவ கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருப்பார்.
இதே காலகட்டத்தில் ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்திற்காக இவர் நடித்து வந்த “உயர்ந்த மனிதன்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே, ஏ வி எம் நிறுவனத்தின் சம்மதத்துடன் “காவல் தெய்வம்” திரைப்படத்திற்காக ஐந்தே நாட்களில் அவரது பகுதிகளை நடித்துக் கொடுத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். பின்னாட்களில் சிவாஜிகணேசனின் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவரான இயக்குநர் கே விஜயன் இயக்குநராக அறிமுகமானதும் இந்த “காவல் தெய்வம்” திரைப்படத்தின் மூலமே.
1969ம் ஆண்டு மே 01 அன்று வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், லட்சுமி, ஆர் முத்துராமன், சௌகார் ஜானகி, எஸ் வி சுப்பையா, எம் என் நம்பியார், எஸ் ஏ அசோகன், ஒ ஏ கே தேவர், நாகேஷ், வி கோபாலகிருஷ்ணன், ஜி சகுந்தலா, டி எஸ் பாலையா, வி கே ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், சண்முகசுந்தரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தும் படம் ஒரு மிதமான வெற்றியையே பதிவு செய்திருந்தது.