உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் |
பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் படம் 'வேட்டுவம்'. ஆர்யா, 'அட்டகத்தி' தினேஷ், சோபிதா துலிபாலா, லிஸி ஆண்டனி , கலையரசன், ஷபீர், ஜான் விஜய், மைம் கோபி, லிங்கேஷ், சாய் தீனா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதனை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் நடந்தது. தற்போது வேதாரண்யம் பகுதியில் நடந்து வருகிறது. வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி பகுதியில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் காரில் இருந்து தாவிப் பாயும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் மோகன்ராஜ் திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மோகன்ராஜை சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 52. இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.