யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே |
ஜவான் படத்திற்கு பின் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர் அல்லாமல் இந்த படத்தில் மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் நாயகிகளாக நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்னொரு நாயகியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் என கிட்டத்தட்ட உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 1 மற்றும் 2 படங்களில் நடித்தார் ராஷ்மிகா. இப்போது இந்தப்படம் மூலம் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க போகிறார்.