நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
நடிகர் விஷ்ணு விஷால், தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பின்னர் பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்தார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தைக்கு ஐதராபாத்தில் நேற்றுமுன் தினம் நடந்த விழாவில் ‛மிரா' என பெயர் சூட்டி இருக்கிறார் ஹிந்தி நடிகரான அமீர்கான். ‛மிரா' என்றால் அளவு கடந்த அன்பு, அமைதி என அர்த்தமாம். அப்படியே விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவர் தம்பி நடித்த ‛ஓஹோ எந்தன் பேபி' படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டி இருக்கிறார்.
விஷ்ணு விஷால், ஜூவாலா குடும்பத்தினர் இடையே நெருங்கிய நட்பில் உள்ளார் அமீர்கான். சென்னையில் வெள்ளம் வந்தபோது விஷ்ணு விஷால் வீட்டில் தங்கியிருந்தார் அமீர்கான். அப்போது வெள்ளத்தில் சிக்கிய அவர்களை நடிகர் அஜித் உடன் துணையுடன் பத்திரமாக மீட்டனர்.
இந்த தகவலை கூறியுள்ள விஷ்ணு விஷால், அந்த படத்தில் நான் நடிகராக வருகிறேன். அது கவுரவ வேடம் அல்ல. அடுத்து ‛கட்டா குஸ்தி 2, ராட்சசன் 2' படங்களில் நடிக்கிறேன் என பேசியுள்ளார். ‛ஓஹோ எந்தன் பேபி' படத்தில் அவர் தம்பி உதவி இயக்குனராகவும், இவர் நடிகராகவும் வருவதாக கதை நகர்கிறதாம்.