லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'குபேரா' படத்தை அடுத்து, நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம், ஹிந்தியில் 'தேரே இஸ்க் மெயின்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு 'அறுவடை' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை 15ல் துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ஜீவா உடன் 'முகமூடி', விஜயுடன் 'பீஸ்ட்', சூர்யாவுடன் 'ரெட்ரோ' ஆகிய படங்களில் நடித்திருந்தார். முதலில் மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.